தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 04th April 2019 08:21 AM | Last Updated : 04th April 2019 08:21 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வலதுபுறம் உள்ள உசிலை மரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்து, கணேஷ் நகர் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கணேஷ் நகர் போலீஸார் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலையில் தூக்கிட்ட நிலையில் இருந்த அந்த ஆண் சடலத்தின் சட்டைப் பையில் இருந்த துண்டுச்சீட்டில் பாபு என்று பெயர் இருந்தது. கணேஷ் நகர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.