பொன்னமராவதியில் பாஜக பிரசார அணி தெருமுனை பிரசாரம்

பொன்னமராவதியில் பாஜக பிரசார அணி மேற்கொண்ட தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் பாஜக பிரசார அணி மேற்கொண்ட தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பி. பாஸ்கர் தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலர் ராம. பழனியாண்டி,  நகரச் செயலர் பிஎல். ராஜேந்திரன், தேமுதிக தெற்கு ஒன்றியச் செயலர் சின்னக்கருப்பன், தமாகா நகரச் செயலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பாஜக கொள்கை பரப்புச் செயலர் எஸ். மகேஷ், ஸ்கில் 
இந்தியா ரவிபெருமாள் ஆகியோர் மோடியின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கிப் பேசினர். நகரச்செயலர் சேதுமலையாண்டி நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com