சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில்  வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அறந்தாங்கியில் திங்கள்கிழமை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
  புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமையில், அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் சி. கோகிலா முன்னிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள ஒடிசா மாநில சிறப்புக் காவல் படையின்கட்டளை அதிகாரி எஸ்.கே.சிங் தலைமையிலான காவலர்கள், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையினர், ஊர்க்காவல்
  படையினர் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினர்.  காரைக்குடிசாலை சோதனைச் சாவடியிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு,  வாகைமரம் சாலை, பெரியக்கடைவீதி, எம்ஜிஆர் சிலை, பழைய ஆஸ்பத்திரி சாலை,  வட்டாட்சியரகச் சாலை வழியாக பட்டுக்கோட்டை சாலை மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai