சுடச்சுட

  

  அறந்தாங்கியில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட பெண் சடலம் அழுகிய நிலையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
  அறந்தாங்கி பஞ்சாத்தி சாலை காலனியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சர்மிளாபானு (28).  இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை.
  இதனால் கணவர்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், சனிக்கிழமை பேராவூரணி சந்தைக்குச் சென்ற ஷேக் அப்துல்லா, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது கதவு உள்பக்கம் பூட்டிய நிலையில்  இருந்துள்ளது.
  இதையடுத்து அருகிலிருந்தவர்களுடன் கதவை உடைத்து திறந்த போது, சர்மிளாபானு  தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடந்தார். மேலும், அவரது உடல் அழுகியநிலையிலும் காணப்பட்டது.
  தகவலறிந்த அறந்தாங்கி போலீஸார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai