சுடச்சுட

  

  கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வாரம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
  பணியின் போது தங்கள் உயிரை துச்சமாக நினைத்து  பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்து உயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.14 ஆம் தேதி தீ தொண்டு நாள் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நிலைய அலுவலர் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களின் தியாகம் நினைவுக்கூரப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai