பெரியார் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாவிடில் போராட்டம்

அறந்தாங்கியில் பெரியார் சிலையில் தலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக்

அறந்தாங்கியில் பெரியார் சிலையில் தலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லையெனில் அனைத்துக் கட்சிகளைத் திரட்டி அறப்போராட்டம் நடத்தப்படும்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அறந்தாங்கியில் கடந்த 8 ஆம் தேதி  பெரியார் சிலை தலை உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமாக ஸ்தபதிகளை கொண்டு சிலை சீரமைக்கப்பட்டது. 
அறந்தாங்கிக்கு திங்கள்கிழமை வந்த வீரமணி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது:
மதங்கள் கடந்து, பல நாடுகளும் போற்றும் தலைவர் பெரியார். அவரின் தலை தேர்தல் நேரத்தில் இரவோடு இரவாக சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.  சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமாகியும் காவல்துறையால் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாததற்கு வேறு எதுவும் நிர்பந்தம் காரணமா எனத் தெரியவில்லை.
தேர்தல் முடிந்த ஒரு வாரக் காலத்துக்குள் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனில், அனைத்துக் கட்சிகளையும் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்தப்படும்.  
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது என்றார் வீரமணி.  
அப்போது, ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பெ.ராவணன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com