சுடச்சுட

  


  புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே புகாரின்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகன ஓட்டியிடம் இருந்து ரூ. 45 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர்.
  தகவலின்பேரில், கீரமங்கலம் பகுதியில் துரையரசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கீரமங்கலம் அருகேயுள்ள நகரத்தைச் சேர்ந்த முத்துராஜதுரையின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.45,300 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலங்குடி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராதாஜெயலெட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai