சுடச்சுட

  


   விராலிமலையில் இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி தலைமையில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  விராலிமலை காமராஜ் நகரில் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி தலைமையில் கொடி அணி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸ் துறையின் மூலம் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் விராலிமலை காமராஜ் நகர், கடைவீதி, சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி, விராலிமலை காவல் ஆய்வாளர் மதன் உள்பட 300-க்கும் மேற்பட்ட உள்ளூர்,  வெளி மாநில போலீஸார் கலந்து கொண்டனர். 
  கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் தினேஸ்குமார் முன்னிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள ஒடிஸா மாநில சிறப்புக் காவல் படை வீரர்கள், புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையினர் , ஊர்க் காவல் படையினர் அடங்கிய வீரர்கள் கந்தர்வகோட்டை வெள்ளமுனியன் கோயில் திடலில் இருந்து ஊர்வலமாக தொடங்கிய கொடி அணிவகுப்பு பட்டுக்கோட்டை சாலை, மாரியம்மன் கோயில் தெரு , செட்டித்தெரு , பெரிய கடைவீதி , புதுகை சாலை, பேருந்து நிலையம் வழியாக  காந்தி சிலை வந்து பேரணி நிறைவடைந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai