அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
By DIN | Published On : 23rd April 2019 08:54 AM | Last Updated : 23rd April 2019 08:54 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மற்றும் தன்னாட்சி பெற்ற மன்னர் கல்லூரி ஆகியவற்றில் நிகழாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு, பி.எஸ்.ஸி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் பி.பி.ஏ., நிர்வாகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த இளங்கலை படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் மே 6 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் கல்லூரி வளாகத்தில் வழங்கப்படுகிறது.
மன்னர் கல்லூரி: புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ., வரலாறு, பொருளியல், ஆங்கிலம், பி.லிட்., தமிழ் இலக்கியம், பி.எஸ்.ஸி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உடற்கல்வி, பி.காம்., வணிகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இளங்கலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
வரும் மே 10 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்க கடைசி நாள். மாணவர்கள் தங்களது மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.