முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் தள்ளுபடி விற்பனை
By DIN | Published On : 04th August 2019 03:36 AM | Last Updated : 04th August 2019 03:36 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை வடக்குராஜவீதி, பொன்னமராவதி அண்ணாசாலை ஆகிய இடங்களில் உள்ள ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் ஆடித் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஆவணி மாதத் திருமணங்களுக்காக சிறப்புத் தள்ளுபடியுடன் பட்டுச்சேலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
ஆரணி, திருபுவனம், காஞ்சிபுரம், பனாரஸ் போன்ற இடங்களின் பட்டுச் சேலைகளும் சொந்தத் தறியில் தயாரான தீர்க்காயுஷ்பட்டு, வர்ணதாரா பட்டு, ஹம்சத்வனி பட்டு போன்றவையும் 100 சதவிகித உத்தரவாதத்துடன், சில்க் மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விலையில் இந்த பட்டுச் சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தள்ளுபடி விற்பனையுடன் கூடுதல் பரிசுப் பொருளும் வழங்கப்படுகிறது. இந்தச் சிறப்புச் சலுகை வரும் 17ஆம் தேதி வரை மட்டுமே என ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் இணை நிர்வாக இயக்குநர் அருண் தெரிவித்தார்.