முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது
By DIN | Published On : 04th August 2019 03:35 AM | Last Updated : 04th August 2019 03:35 AM | அ+அ அ- |

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவர் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை பாலன் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (62). இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ராமச்சந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.