கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்குவிழா ஆலோசனைக் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்த ஆலோசனைக்


பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று அடுத்த மாதம் 8ஆம் தேதியன்று குடமுழுக்கு விழா நடத்த  திருப்பணிக்குழுவினரால்  முடிவு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் முன்மண்டபத்தில் திருப்பணிக்குழு தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் நாட்டார்கள், நகரத்தார்கள், மண்டகப்படிதாரர்கள் முன்னிலையில் வரும் ஆவணி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்தும், கொடையாளர்களிடம் நிதி சேகரிப்பது குறித்தும், குடமுழுக்கு விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும், யாகசாலைக்கு பாதுகாப்பான வகையில் கொட்டகை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com