Enable Javscript for better performance
ஆக.10 இல் பொது விநியோக திட்ட குறைகேட்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வரும் 10ஆம் தேதி பொது விநியோகத் திட்ட நுகர்வோர் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை வட்டம் மணவிடுதி கிராமம், ஆலங்குடி வட்டம் குப்பக்குடி கிராமம், திருமயம் வட்டம் பேரையூர் கிராமம், குளத்தூர் வட்டம் புலியூர் கிராமம், இலுப்பூர்  வட்டம் தாயினிப்பட்டி கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் வடுகப்பட்டி கிராமம், அறந்தாங்கி வட்டம் பரவாக்கோட்டை கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் வெளிவயல் கிராமம், மணமேல்குடி வட்டம் பெருமருதூர் கிராமம், பொன்னமராவதி வட்டம் மரவாமதுரை கிராமம், கறம்பக்குடி வட்டம் கருப்பட்டிப்பட்டி கிராமம், விராலிமலை வட்டம் விராலூர் கிராமம் ஆகிய இடங்களில் இந்தக் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
    சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைபாடுகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai