புங்கினிப்பட்டி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

இலுப்பூர் அருகேயுள்ள புங்கினிப்பட்டி அய்யனார் கோயில் புரவி (குதிரை) எடுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலுப்பூர் அருகேயுள்ள புங்கினிப்பட்டி அய்யனார் கோயில் புரவி (குதிரை) எடுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புரவி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
புங்கினிப்பட்டி பகுதி மக்களின் காவல் தெய்வமாகப் போற்றப்படும், அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  நிகழாண்டுக்கான விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, நேர்த்தி கடனாக குதிரை, காளை, பசு, திருபாதம், திருமண தம்பந்திகள், குழந்தைகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு உருவில் வண்ண சிலைகளை சுமந்து வந்தனர்.
முன்னதாக, இந்த சிலைகளை மந்தையில் வரிசைப்படுத்தி வேட்டி, துண்டு, வண்ண மாலைகளால் அலங்கரித்து வைத்திருந்தனர். 
அத்துடன் அய்யனார் உள்ளிட்ட உபதெய்வங்களின் சிலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மந்தை திடலில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 
பிறகு பரிவாரங்களுடன் சாமி, குதிரைகள் உள்ளிட்ட சிலைகள் அந்தந்த பகுதி கோயில் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com