பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக இருவர் மீது வழக்கு
By DIN | Published On : 06th August 2019 10:02 AM | Last Updated : 06th August 2019 10:02 AM | அ+அ அ- |

அன்னவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கடைவீதியில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
அன்னவாசல் வேல்பாண்டியன் (42), பெருமநாடு அர்ஜூன் (32) ஆகிய இருவரும், கடைவீதி பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அன்னவாசல் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.