உழவர் சந்தைக்கு சென்ற பள்ளி மழலைகள்
By DIN | Published On : 09th August 2019 09:03 AM | Last Updated : 09th August 2019 09:03 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி பயிலும் மழலைகள் 100 பேர் வியாழக்கிழமை காலை உழவர் சந்தைக்கு களப்பயணமாகச் சென்றனர்.
அங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் பெயர்களையும், விலைகளையும் அவர்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு காய்கறிகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகள், சத்துகளைப் பற்றியும் கேட்டறிந்தனர்.
மேலும், காய்கறிகளை எடையிடும் கருவிகளையும் எடைக்கற்களையும் விவரமாகக் கேட்டறிந்தனர். இப்பயணத்தை, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வசுமதி, ஆசிரியைகள் சரசு, சந்திரகலா, தங்கம், கோமதி, நிஷாந்தினி, கீதா, அகல்யா உள்ளிட்டோர் இப்பயணத்தை ஒருங்கிணைத்தனர்.