சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை
By DIN | Published On : 09th August 2019 09:10 AM | Last Updated : 09th August 2019 09:10 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஆக. 15 ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஒத்திகையை மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
ஒத்திகையில், இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதர் தெரசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.