மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்
By DIN | Published On : 09th August 2019 09:03 AM | Last Updated : 09th August 2019 09:03 AM | அ+அ அ- |

மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த . விஜயலட்சுமி.
புதுக்கோட்டை மாவட்டம் , கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு ஆய்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: இந்தப் பள்ளி வளாகம் மரங்கள் நிறைந்து, நிழல் தரும் அமைப்புடன் வெயிலின் தாக்கமின்றி நிற்க முடிகின்றது.
இதனை அனுபவ ரீதியாக உணரும் மாணவர்கள், மரம் வளர்ப்பின் அனுபவம் உணர்ந்து , தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் மரம் வளர்ப்பதில் அக்கறை காட்டி, மரம் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி நடந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சோ. ராமச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என். ராமநாதன், கல்வி வளர்ச்சிக் குழு உறுப்பினர் தம்பிராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.