லாரி ஓட்டுநர் மாரடைப்பால் சாவு
By DIN | Published On : 09th August 2019 09:10 AM | Last Updated : 09th August 2019 09:10 AM | அ+அ அ- |

கந்தர்வகோட்டை அருகே லாரி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், முத்துடையான்பட்டி மூக்கையா மகன் செல்வராசு (39). இவருக்குச் சொந்தமான லாரியில் தஞ்சாவூரில் லோடு இறக்கிவிட்டு புதன்கிழமை இரவு புதுக்கோட்டைக்கு வரும் வழியில் கந்தர்வகோட்டை அருகே புதுநகர் பிரிவு சாலை அருகே புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக லாரியை நிறுத்தியுள்ளார். விடிந்தும் வெகுநேரமாக ஆகியும் லாரி ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில், ஓட்டுநர் இறந்த நிலையில் இருந்துள்ளார். தகவலறிந்த கந்தர்வகோட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து
உடலை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.