சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தானியம் அடைக்கலம்காத்தார் கோயிலில் ஆடிச்சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இதில் அடைக்கலம்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்கணி சித்தன், சன்னாசி, பட்டாணி ஆகிய தெயவங்களுக்கு பால், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
  கந்தர்வோட்டையில் கிடாவெட்டு பூஜை...
  கந்தர்வகோட்டை ஸ்ரீவெள்ளமுனீஸ்வரர் கோயில் கிடாவெட்டு பூஜை திங்கள்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. 
  விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் காண்பித்து, சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 70க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை மதியம் கோயில் முன்பாக அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai