சுடச்சுட

  

  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான நீச்சல் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
  பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்றனர்.
  மன்னர் கல்லூரியின் முதல்வர் ஜெ. சுகந்தி போட்டிகளைத் தொடங்கி வைத்து வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.
  போட்டிகள் 12 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களை வைத்து சிறப்பிடம் பெற்ற கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
  மாணவர் பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக பிரதான வளாக அணி முதலிடத்தையும், திருச்சி தேசியக் கல்லூரி இரண்டாமிடத்தையும், திருச்சி ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும், புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றது.
  மாணவிகள் பிரிவில் திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி முதலிடத்தையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கலை. பிரதான வளாக அணி ஆகியோர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
  நிகழ்ச்சியில், பல்கலைக்கழக விளையாட்டுக்குழுச் செயலர் அ. பழனிசாமி, ஆண்கள் பிரிவுக்கான பொறுப்பாளர்  ஸ்ரீதரன் தங்கதுரை,  பெண்கள் பிரிவுக்கான பொறுப்பாளர் சி. மாலதி, மாவட்ட நீச்சல் சங்கத் தலைவர் முருகப்பன், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் தங்கராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் இ. ஜான் பார்த்திபன், உடற்கல்வி பயிற்றுநர் அ.க. ராம்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai