சுடச்சுட

  

  பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இக்கோயில் புராதன சிறப்பு பெற்ற கோயிலாகும். கிபி இரண்டாம் நூற்றாண்டில் பூம்புகாரிலிருந்து வணிகம் செய்ய மதுரைக்கு புறப்பட்ட கோவலன் தன் மனைவி கண்ணகியுடனும், சமணத்துறவி கவுந்தியடிகளுடனும் பொன்னமராவதி வழியாக சென்றதாகவும், அப்போது இக்கோயிலில் தங்கியிருந்து இளைப்பாறி சென்றதாகவும் கூறப்படுகிறது. 
  இத்தகைய சிறப்புடைய இக்கோயிலில், நிகழாண்டு ஆடித் திருவிழா  கடந்த 4ஆம் தேதி காப்புக்கட்டுதழுடன் தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா தலைமையில்  செவ்வாய்க்கிழ மை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடிக்க புறப்பட்ட தேர், கோயிலை வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai