சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்புக் குறைகேட்பு நாள் கூட்டம், வரும் ஆக. 28ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
  இந்தக் குறைகேட்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளில் உள்ள குறைகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக மனுக்களாக அளித்துப் பயன்பெறலாம்.
  மனுக்களின் இரு பிரதிகளுடன், படைவீரர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai