சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
  புதுகை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருச்சி காவேரி புத்தக நிலையம் மற்றும் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியை கல்லூரிக்குழு தலைவர் சி.நாகப்பன் தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் சிவ.சொர்ணம் வாழ்த்திப்பேசினார். 
  புத்தகக் கண்காட்சியில் பொது அறிவு, பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுலா, இலக்கிய, இலக்கண களஞ்சிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. 
  மாணவ, மாணவியர் கண்காட்சியைப் பார்வையிட்டு நூல்களை வாங்கி செல்கின்றனர். கல்லூரி நூலகர் ஆர்.தெய்வானை, நூலக உதவியாளர் கி.அன்னலெட்சுமி ஆகியோர் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர். தமிழ்த்துறை தலைவர் ம.செல்வராசு மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai