சுடச்சுட

  

  புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள அருள்மிகு வெங்களப்பிடாரி அம்மன் திருக்கோயிலின் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  சுந்தரவிநாயகர் கோயிலில் இருந்து வெங்களப்பிடாரி கோயிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம், தீர்க்கக் குடம் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து தீ மிதித்தலும் நடைபெற்றது.
  பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இத்திருவிழாவின் தொடக்கமாக கடந்த 6ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai