கல்வித்துறை அலுவலர்களுடன்  முதன்மைக் கல்வி அலுவலர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் மற்றும் கல்வித்தரம் உயர்த்துதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட குறுவள மையத்தின் தலைமையிட மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழங்கும் பிற பணிகளையும் ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட தலைமை இடத்து மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த ஆசிரியர் பயிற்றுநர்களின் 
பணிகளை சீராய்வு செய்ய வேண்டும்.
ஆக. 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் கலந்து கொள்ள வேண்டும். 
உண்டு உறைவிடப் பள்ளிகளை ஆய்வு செய்யும் போது மாணவர்களின் பாதுகாப்பு, கற்றல் திறன், வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார் விஜயலட்சுமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com