சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவையொட்டி கடந்த 6-ஆம் தேதி இக்கோயிலில் காப்புக் கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளிய பிறகு பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர், முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிறைவுற்றது. 
  விழாவில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், கருமங்காடு மற்றும் சுற்றுக்கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார்  செய்தனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai