சுடச்சுட

  

  புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவிகள் சிபிஎஸ்சி பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில், கோகோ போட்டியில் முன்றாமிடம் பிடித்துள்ளனர்.  
  திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் அண்மையில் நடைபெற்றன.
  இதில் கோகோ போட்டியில் 14 வயதுக்குட்டோர் பிரிவில் 17  அணிகள் பங்கேற்றன. புதுக்கோட்டையைச் சேர்ந்த மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். 
   வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் இயக்குநர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் ஜலஜா குமாரி, விளையாட்டு ஆசிரியை பத்மாவதி ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai