சுடச்சுட

  

  விநாயகர் சதுர்த்திக்குத் தயாராகும் வண்ண வண்ணச் சிலைகள்  

  By DIN  |   Published on : 15th August 2019 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vinayakar

  விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுக்கோட்டை நகரில் ஒரு அடி முதல் 12 அடி வரையிலான வண்ண வண்ணச் சிலைகள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.
   விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப். 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கிராமங்கள், நகரங்கள் தோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ஒரு நாளில் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும்.
   புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டுக்கான விநாயகர் சிலை செய்யும் பணி தெற்கு ராஜவீதியில் உள்ள கடையொன்றில் நடைபெற்று வருகிறது. ஒரு அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகளைச் செய்து வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சிலைகள் தயாரிக்கும் மணி கூறியது ஒரு அடி சிலை ரூ. ஆயிரத்தில் தொடங்கி, 12 அடி சிலை ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம். காகிதக் கழிவுகள் மற்றும் கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்படும் இச்சிலைகளில் வண்ணம் பூசி முழு வடிவம் கொடுக்கிறோம்.
   15 நாட்களுக்கு முன்பே சிலை செய்வதற்காக கரூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இருந்தும் சிலை செய்பவர்கள் வந்துள்ளனர்.
   ஆஞ்சநேயர் தனது தோளில் விநாயகரை சுமக்கும் வடிவம், விநாயகர் சிவனைத் தூக்கிச் சுமக்கும் வடிவம் போன்றவை நிகழாண்டில் வந்துள்ள புதியவை என்றார் மணி.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai