போதிய ஆசிரியர்கள் கோரி மாணவர்கள் போராட்டம்

அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கல்லூரியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி

அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கல்லூரியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவ, மாணவிகள்  புதன்கிழமை கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை என இரு  பிரிவுகளாக பயின்று வருகின்றனர். சென்ற கல்வியாண்டு வரை பாரதிதாசன் மாதிரி உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வந்தது. பல்கலைக்கழகம் சார்பில்   ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தக் கல்வியாண்டு முதல் அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டு கடந்த ஜூன்  முதல் கல்லூரி செயல்படுகிறது. கல்லூரி முதல்வராக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி கூடுதல் பொறுப்பாக இந்தக் கல்லூரியையும் மேற்பார்வை செய்து வருகிறார். ஆனால் போதிய விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இல்லாததால் 5 மணி நேரம் நடக்க வேண்டிய வகுப்புகள் 2 மணி நேரம் மட்டுமே நடப்பதாகவும். இதனால் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறி  பிஎஸ்சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து கல்லூரிக்கு வந்த ஆவுடையார்கோவில் போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மாணவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு மேலதிகாரிகளுக்கு அனுப்பி இதுகுறித்து முடிவெடுப்பதாகக் கூறினர். 
இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறுகையில் போதிய ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com