மனநலம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 22nd August 2019 09:45 AM | Last Updated : 22nd August 2019 09:45 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், மிஷன் மெண்டல் ஹெல்த் வாழ்வாதார பயிற்சி மையம் இணைந்து புதுக்கோட்டை அரசு முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியில் மனநலம் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தியது.
சங்கத் தலைவர் மீனு கணேஷ் தலைமை வகித்தார். இளையோர் சங்க 2020 - 21 ஆம் ஆண்டின் மாவட்டத் தலைவர் சி.பிரசாத் முன்னிலை வகித்தார்.
மெண்டல் ஹெல்த் வாழ்வாதாரப் பயிற்சி மையத்தின் மாவட்ட ஆற்றுப்படுத்துநர் எஸ். மைக்கேல்ராஜ் திட்ட விளக்க உரையாற்றினார்.
ரோட்டரி மாவட்டத்தின் மக்கள் நன்மதிப்பு இணைச் செயலர் கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,"மனம் நலம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கிப் பேசினார்.
இளையோர் சேவைச் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு: புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளியில் தொடங்கப்பட்ட இளையோர் சேவை சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவராக அப்ரோஸ், செயலராக ஐஸ்வர்யா, பொருளாளராக கலையரசி ஆகியோரை மாவட்ட இளையோர் சங்கத் தலைவர் சி. பிரசாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்துப் பேசினார்.
முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் எஸ். மேகநாதன் வரவேற்றார். முடிவில் செயலர் சினேகா நன்றி கூறினார்.