Enable Javscript for better performance
கதவை உடைத்து 18 பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட் டை  மாவட்டம், கீரமங்கலம் அருகே  வீட்டு கதவை உடைத்து 18 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், ரூ 75 ஆயிரம் ரொக்கத்தை  திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    கீரமங்கலம் அருகிலுள்ள  காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது புகாரி(48).  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டில், இவரது மனைவி ஜலீலா பேகம், மகன் பைசல், மகள் பசீராபேகம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்,  வியாழக்கிழமை இரவு  வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்,  அலமாரியில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம்,வெள்ளி பொருள்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.
    இது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஜலீலா பேகம் புகாரளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு, திருட்டில் ஈடுபட்டவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai