Enable Javscript for better performance
பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை- Dinamani

சுடச்சுட

    

    பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை

    By DIN  |   Published on : 24th August 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆவுடையார்கோவில் அருகிலுள்ள பாண்டிபத்திரம்  அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை  லட்சார்ச்சனை நடைபெற்றது.
    இக்கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, கடந்த 18- ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.  லட்சார்ச்சனையொட்டி வெள்ளிக்கிழமை  விநாயகர்பூஜையுடன் ஹோமங்கள் தொடங்கின.
    ருத்ரஜபம், ஹோமம் ,வேதபாராயணம் செய்து ஹோமங்களில் பல்வேறு திரவியங்கள் இடப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,  முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு , யாகத்தில் வைக்கப்பட்ட கடங்களில் உள்ள புனித நீர் ஊற்றி  சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
    லட்சார்ச்சனையை ஆவுடையார்கோவில் பப்புசாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சிகளில் பாண்டிபத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai