Enable Javscript for better performance
வரத்து வாரிகள் சீரமைக்கப்படாததால் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை- Dinamani

சுடச்சுட

    

    வரத்து வாரிகள் சீரமைக்கப்படாததால் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை

    By DIN  |   Published on : 24th August 2019 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரியிலிருந்து கடைமடைக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் வரத்து வாரிகள் சீரமைக்கப்படாததால், தண்ணீர் அப்பகுதிக்கு வரவில்லை என்றார் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி.
    புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: காவிரியில் தண்ணீர் வரத் தொடங்கியும் இதுவரை கடைமடைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை இல்லை. காரணம் கடைமடைக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் வரத்து வாரிகள் சீரமைக்கப்படவில்லை. 
    தற்போது நடைபெற்று வரும் குடிமராமத்துத் திட்டம் என்பது பழைய முறைப்படியான குடிமராமத்துப் பணிகள் அல்ல. முழுமையாக நடைபெறவில்லை. கள்ளை போதைப் பொருள் என்று சொல்லி தமிழகத்தில் மட்டும் தடை செய்து வைத்திருக்கிறார்கள். கள்ளில் கலப்படத்தைத் தடுக்க முடியாதவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள் என்றார் நல்லசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai