"தலைக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை'

பொன்னமராவதி வட்டாரத்தில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால் கடுமையான

பொன்னமராவதி வட்டாரத்தில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.தமிழ்மாறன்.
பொன்னமராவதி உள்கோட்ட காவல்துறையின் சார்பில்,  சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்களுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
வாகன ஒட்டிகள் சாலை விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சரக்கு வாகனங்களில் கண்டிப்பாக ஆள்களை ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்துக்களைத் தவிர்க்கும்பொருட்டு கட்டாயம் இதை அமல்படுத்திட வேண்டும்.
நமது உயிரைப் பாதுகாக்கும் தலைக்கவசத்தை ஏன் நாம் அணியக்கூடாது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் வாகனங்களை நிறுத்த வேண்டும். சாலைச் சந்திப்புகளில் மெதுவாக செல்வதோடு, கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றார் அவர்.
பொன்னமராவதி காவல் ஆய்வாளர் ச. கருணாகரன் வரவேற்றார். திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், காவல் உதவி ஆய்வாளர்கள் பனையபட்டி ரெக்ஸ் ஸ்டாலின், நமணசமுத்திரம் அன்பழகன், கே.புதுப்பட்டி ஆனந்தன், அரிமளம் மேகநாதன், மாரிமுத்து, சுப்பையா,  போக்குவரத்து உதவி ஆய்வாளர் பொன்னுவேல் மற்றும் சரக்குவாகன ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், உரிமையாளர்கள்,பொதுமக்கள் பங்கேற்றனர்.  
நிறைவில், பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com