மாவட்டத்தில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை  மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில், கிருஷ்ண ஜயந்தி விழா விட்டோபா பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவுக்கு சங்கத்தின் தலைவர் மீனு கணேஷ் தலைமை வகித்தார். செயலர் சினேகா முன்னிலை வகித்தார். கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கும், கிருஷ்ணர் பாடல்களைப் பாடிய குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மகாராணி ரோட்டரி சங்க  உறுப்பினர்கள் விஜயலட்சுமி சோலையப்பன், டாக்டர் சங்கத்தமிழ், கலாவதி பிருதிவிராஜ், வள்ளிக்கண்ணு செல்வம், சுகன்யா முரளி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதுபோல, வியாழக்கிழமை மகாராணி ரோட்டரி சங்கம் மற்றும் இன்னர்வீல் கிளப் ஆகியவற்றின் சார்பில்,  குளோரியஸ் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கோதண்டராமர் கோயிலில் திருமஞ்சனம்:  கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, கந்தர்வகோட்டை அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலில் திருமஞ்சன விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள  அருள்மிகு வேணுகோபாலசுவாமிக்கு  வெள்ளிக்கிழமை காலை திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமியைத் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வேணுகோபால சுவாமி திருவீதியுலா வருதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.  இந்த நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கிருஷ்ண ஜயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

கடையக்குடியில்...
புதுக்கோட்டையை அடுத்த கடையக்குடியிலுள்ள அருள்மிகு பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோயிலில் (ராமர் கோயில்) கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
காலையில் மூலவர் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து கோயில் திடலில் உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதற்கான ஏற்பாடுகளை பட்டர்கள் ஆராமுதன், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com