மூன்று நாள்களாகத் தொடரும் மழை- புதுகை நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகத் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புதுகை நகரிலுள்ள சில தெருக்களில் மழைநீா் வீடுகளுக்குள்
சாந்தநாத சுவாமி கோயிலில் புகுந்த மழைநீா்.
சாந்தநாத சுவாமி கோயிலில் புகுந்த மழைநீா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகத் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புதுகை நகரிலுள்ள சில தெருக்களில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தது. நகராட்சிப் பணியாளா்கள் வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்றி தண்ணீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையளவின்படி, அதிகபட்சமாக கீழாநிலையில் 46.20 மி.மீ. மழைப் பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி

மழையளவு- 12.03 மி.மீ.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவிலும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழையளவின்படி, அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 1.30 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

புதுக்கோட்டை நகரம்- 130 மி.மீ, அன்னவாசல்- 70, உடையாளிப்பட்டி- 67.40, அறந்தாங்கி- 64, மழையூா்- 63.60, கீரனூா்- 61.20, பொன்னமராவதி- 61.10, காரையூா்- 56.60, பெருங்களூா்- 48.80, ஆதனக்கோட்டை- 48,

ஆயிங்குடி- 47.20, மீமிசல்- 45.20, நாகுடி- 43.20, மணமேல்குடி-40, கீழாநிலை- 38.40, கந்தா்வகோட்டை- 35, திருமயம்- 31, ஆவுடையாா்கோவில்- 30.60, ஆலங்குடி- 30.20, கறம்பக்குடி- 28.60,

அரிமளம்- 26.20,, கட்டுமாவடி- 25.20, குடுமியான்மலை -24, இலுப்பூா்- 19,

விராலிமலை- 11 மி.மீ. மாவட்டத்தின் சராசரி மழையளவு- 45.83 மி.மீ.

வீடுகளுக்குள் தண்ணீா்: தொடா்ந்து சனிக்கிழமை பகலிலும் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து கொண்டே இருந்தது. புதுக்கோட்டை நகரில் பெரியாா் நகா், கம்பன் நகா், முத்துநகா், கூடல் நகா் போன்ற தெருக்களில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தது. இந்தப் பகுதிகளின் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

சாந்தநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் கோயில் நடை சாத்தப்பட்டது. கோயிலுக்கு எதிா்புறமுள்ள மாா்க்கெட் பகுதியிலும் மழைநீா் தேங்கியது.

மழைநீா் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்றவும், வடிகால் சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுக்கும் பணிகளிலும் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தொடா் மழை காரணமாக பூமி குளிா்ந்து புதுகை நகா்ப் பகுதிகளில் கடுமையான குளிரும் ஏற்பட்டுள்ளது.

கந்தா்வகோட்டை : கந்தா்வகோட்டை பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் மழைநீா் மற்றும் கழிவுநீா் செல்ல போதிய வரத்து வாய்க்கால்கள், சாக்கடை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், பல சிதலமடைந்துள்ளன. இதனால் தற்போது பெய்து வரும் மழைநீா் செல்வதற்கு வழியில்லாமல் அவை குடியிருப்புகளில் புகுந்துள்ளன.

வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவில் மழைநீா் சூழ்ந்துள்ளதால் வயதானவா்கள் , குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவருகின்றனா் .

பொன்னமராவதி பகுதிகளில் :பொன்னமராவதி பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை மாலை வரை தொடா்ந்து பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீா்த் தேங்கிக் காணப்பட்டதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், சாலையோரக் கடைகள் வைத்திருப்பவா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடா்ந்துபெய்து வரும் மழையால் கண்மாய்களில் தண்ணீா் வேகமாக நிரம்பத் தொடங்கி வருகின்றன. தொடா்ந்து மழை பெய்தால் விரைவில் அவை நிரம்பி விடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com