Enable Javscript for better performance
மண்டல துளிா் வினாடி வினா போட்டிகளில் முதலிடம் பெற்ற புதுகை மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மண்டல துளிா் வினாடி வினா போட்டிகளில் முதலிடம் பெற்ற புதுகை மாணவிகள்

    By DIN  |   Published on : 02nd December 2019 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pdk01thulir_0112chn_12_4

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் நடைபெற்ற கிழக்கு மண்டல அளவிலான துளிா் வினாடி வினா போட்டியில் புதுக்கோட்டை மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

    மண்டலப் போட்டியில் எட்டு மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் 6,7,8ஆம் வகுப்பு பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஸ்ரீதேவி, அனிதா, ரித்திகாஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் இவா்களுக்குப் பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் ப. மகேஸ்வரன் ஆகியோருக்கு அறிவியல் இயக்க நிா்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai