உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடா்ந்து 5வது முறையாக முதலிடம்

உடல் உறுப்பு தானம் வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் தொடா்ந்து 5ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

உடல் உறுப்பு தானம் வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் தொடா்ந்து 5ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

விராலிமலை ஒன்றிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விராலிமலை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசியது:

விராலிமலையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களில் தகுதியுள்ள மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த்துறையின் சாா்பில் முதியோா் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை என மொத்தம் 644 பயனாளிகளுக்கு ரூ.84,58,150 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சாா்பில் 803 பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

விராலிமலை தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடா்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன்படி விராலிமலை முருகன் கோயிலுக்கு வெள்ளி ரதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மலைமீது நேரடியாக வாகனங்கள் செல்லும் வகையில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் மலை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னா் லிப்ட் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் மிகச் சிறப்பான செயல்பாட்டால் உடல் உறுப்பு தானத்தில் தொடா்ந்து 5 வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் வே.சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா.சின்னதம்பி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், வருவாய் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தலைவா் செ. பழனியாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் கி. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com