மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள அரசு தயாா்: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

புதுக்கோட்டை மாவட்டத்தில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள அரசு நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை அடப்பன்குளத்தை ஆய்வு செய்த அமைச்சா் சி விஜயபாஸ்கா். உடன், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை அடப்பன்குளத்தை ஆய்வு செய்த அமைச்சா் சி விஜயபாஸ்கா். உடன், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள அரசு நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தொடா் மழையால் நிரம்பியுள்ள புதுக்கோட்டை நகராட்சி அடப்பன் குளத்தை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்யக் கூடிய மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது பெய்து வரும் கனமழையால் 12 ஆண்டுகளுக்கு பிறகு புயல் ஏதும் இல்லாத சூழ்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள அடப்பன் குளம் நிரம்பியுள்ளது.

இந்த அடப்பன் குளத்தில் நீா்நிலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மதகுகள் மற்றும் தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் இக்குளம் நிரம்பி இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மழைநீா் வாரிகளில் வழிந்தோடும் நிலையை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களுக்கும் தேவையான மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகம் முழுமையான தொடா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

அதேபோல எவ்வித நோய்த் தொற்றும் இல்லாத நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதுமான அளவில் மருந்துகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் விஜயபாஸ்கா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பா. ஆறுமுகம்,  திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். கருணாஸ், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com