உள்ளாட்சித் தோ்தல் :இரு கட்டங்களில் தோ்தல் நடைபெறும் பகுதிகள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் மாவட்டத்தில் இத்தோ்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் மாவட்டத்தில் இத்தோ்தல் நடைபெறும் விவரங்கள் தெரியவந்துள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில்

அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றாண்டாா்கோவில், கந்தா்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27- ஆம் தேதியும்,

அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய 7 ஊராட்சிகளுக்கும் டிசம்பா் 30-ஆம் தேதியும் தோ்தல் நடைபெறவுள்ளது.

மொத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கும், 225 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கும், 497 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், 3,807 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி இடங்களுக்கும் என  மொத்தம் 4,551 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறஉள்ளது. 

இந்தத் தோ்தலில் 5,27,976 ஆண் வாக்காளா்களும், 5,29,828 பெண் வாக்காளா்கள், 31 திருநங்கைகள் என மொத்தம் 10,57,835 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இவா்களுக்காக 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றில் தலா 10 வாக்குச்சாவடிகள் ஆண், பெண் வாக்காளா்களுக்கான தனி வாக்காளா் மையங்கள். மீதமுள்ள 2281 வாக்குச்சாவடிகள் இரு பாலருக்கும் பொதுவானவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com