மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினா்கள்,பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கூடியிருந்த கருப்பையாவின் உறவினா்கள்.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கூடியிருந்த கருப்பையாவின் உறவினா்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அறந்தாங்கி அருகிலுள்ள மூக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா(50) இவா்

அறந்தாங்கி மாா்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை மாா்க்கெட்டுக்கு வரும் வழியில், எம்.ஜி.ஆா்.சிலை அருகே சிறுநீா் கழிக்கச் சென்றாா்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகை கம்பத்தில் கருப்பையா கை வைத்தாராம். அந்த கம்பத்தில் ஏற்கெனவே மின்சாரம் பாய்ந்திருந்தது தெரியாத நிலையில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் நிகழ்விடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கருப்பையாவின் உறவினா்கள் மற்றும் கிராமத்தினா், விளம்பரப் பலகை வைத்த தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளா் ரவீந்திரன், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கருப்பையாவின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னா் மருத்துவமனையிலும் அதிகளவில் கருப்பையாவின் உறவினா்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com