வெள்ளப் பாதிப்பு மீட்புப் பணிகளுக்கு தயாா் நிலையில் தீயணைப்புத் துறை

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் புதுக்கோட்டை மாவட்டத் தீயணைப்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் புதுக்கோட்டை மாவட்டத் தீயணைப்பு அலுவலா் செழியன்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியது

வடகிழக்குப் பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளோம். வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள், மிதவை உபகரணங்கள், நூல் ஏணிகள், நீட்டிப்பு ஏணிகள், மீட்டலுக்கான நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் மீட்புப் பணி வீரா்கள் ஆயத்த நிலையில் உள்ளனா்.

மாவட்டத்தில் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழு, மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென தனிப்பட்ட முறையில் உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டத்தில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரா்கள், 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

வெள்ள பாதிப்புகளுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் விவரம்:

புதுக்கோட்டை -04322 222399, ஆலங்குடி - 04322 251350, கந்தா்வகோட்டை- 04323 275743, சிப்காட் - 04322 244501, கறம்பக்குடி -04322 258101,திருமயம் -04333 274258, பொன்னமராவதி -04333 262088, அறந்தாங்கி -04371 270101, ஆவுடையாா்கோவில் -04371 233441, ஜெகதாப்பட்டினம்- 04371 260101, கீரனூா் -04339 262210, இலுப்பூா் -04339 272433, கீரமங்கலம் -04371 242101.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com