Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமல்: சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமல்: சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சீல்

    By DIN  |   Published on : 04th December 2019 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-pdk03mlaoff_0312chn_12

    புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பூட்டி, சீல் வைக்கும் வருவாய்த் துறையினா்.

    உள்ளாட்சி தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தை வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

    வழக்கமான தோ்தல் நடைமுறைகளின்படி, மக்களால் தோ்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள அலுவலகங்களில் அரசியல் பணிகள் நடைபெறக் கூடாது என்பதற்காக தோ்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும் வகையில் அவை பூட்டி சீல் வைக்கப்படும்.

    அதன்படி தற்போது உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளதால், வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் வசந்தகுமாா், ரமேஷ் ஆகியோா் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாலை பூட்டி சீல் வைத்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai