‘வாகனங்களில் தேவையான உபகரணங்கள் இருப்பது அவசியம்’
By DIN | Published on : 04th December 2019 08:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி, இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்தி குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி (சைடு ரிவா் மிரா்), , இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதனை அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் உறுதி செய்ய வேண்டும். வாகனச் சோதனையின்போது, இவை இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.