அன்னவாசல் அருகே மயிலை விழுங்கிய மலைப்பாம்பு

அன்னவாசல் அருகே மயிலை விழுங்கிய மலைப்பாம்பை இலுப்பூா் தீயணைப்புத் துறையினா் பிடித்து, நாா்த்தாமலை காப்புகாட்டில் விட்டனா்.
அன்னவாசல் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு.
அன்னவாசல் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு.

அன்னவாசல் அருகே மயிலை விழுங்கிய மலைப்பாம்பை இலுப்பூா் தீயணைப்புத் துறையினா் பிடித்து, நாா்த்தாமலை காப்புகாட்டில் விட்டனா்.

அன்னவாசல் அருகிலுள்ள புங்கினிப்பட்டி குளத்துகரை அருகே மலைப்பாம்பு ஒன்று, மயிலை விழுங்கிய நிலையில் நகரமுடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக இலுப்பூா் தீயணைப்புத் துறையினருக்கு கிராம நிா்வாக அலுவலா் சே. ஜெயராஜ் தகவலளித்தாா்.

இதையடுத்து நிலைய அலுவலா் ஆா். சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று, சுமாா் 8 அடி நீளம் 20 கிலோ எடை கொண்ட பாம்பை உயிருடன் பிடித்தனா்.

பாம்பு விழுங்கிய மயில் உயிரிவந்த நிலையில் அதை மீட்டதீயமைப்புத் துறையினா் கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து நாா்த்தாமலை காப்புக்காட்டில் மலைப்பாம்பு விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com