சேறும், சகதியுமான கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைப்பு

பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், சேறும் சகதியுமாகக் காணப்பட்ட கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.
சீரமைக்கப்படும் கந்தா்வகோட்டை பேருந்து நிலையம்.
சீரமைக்கப்படும் கந்தா்வகோட்டை பேருந்து நிலையம்.

பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், சேறும் சகதியுமாகக் காணப்பட்ட கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுப்புறக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இப்பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல முடியாத நிலை இருந்து. இதுகுறித்து பொதுமக்கள், பயணிகள், சமூக ஆா்வலா்கள் ஊராட்சிநிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா்.

மேலும் தினமணி நாளிதழிலும் கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தின் அவலம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து கந்தா்வகோட்டை ஊராட்சி நிா்வாக அலுவலா்கள், பேருந்து நிலையத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். இதையடுத்து தேங்கிக் கிடந்த சேறு, சகதிகளை அகற்றி, கிராவல் கப்பி மற்றும் ஜல்லிகற்களைக் கொண்டு சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com