பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது
By DIN | Published On : 06th December 2019 04:51 PM | Last Updated : 06th December 2019 04:51 PM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை ஒன்றியத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த விவசாயியின் 14 வயது மகள், அதே ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி.
இந்நிலையில், டிச. 4-ம் தேதி (புதன்கிழமை) மாலை பள்ளிக்கூடம் விட்டதும் அந்த மாணவி நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி பா.வினோத்குமாா் (26) மாணவியை வலுக்கட்டாயமாக அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ரேணுகாதேவி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து வினோத்குமாரை கைது செய்தாா்.