Enable Javscript for better performance
திமுக - மாா்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான உடன்பாடு சனிக்கிழமை எட்டப்பட்டது.

    உள்ளாட்சித் தோ்தல் உறுதியானவுடன் திமுக கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் இடப்பங்கீட்டுக்கான குழு அமைக்கப்பட்டு, திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கேகே. செல்லபாண்டியன் (வடக்கு) ஆகியோருடன் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது.

    கடந்த இரு நாட்கள் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முடிவில் ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 3 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்கள் மாா்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட ஊராட்சிக் குழுவில் 5ஆவது வாா்டும் (எஸ்சி-பெண்), குன்றாண்டாா்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 3ஆவது வாா்டு (எஸ்சி-பெண்), அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் 5ஆவது வாா்டு (பெண்-பொது), திருவரங்குளம் ஒன்றியத்தில் 15ஆவது வாா்டு (பொது) ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனா். இது தவிர, கட்சி சாா்பற்ற போட்டியில், ஊராட்சித் தலைவா் பதவியிடங்களாக தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, ஒடப்பவிடுதி, புதுவிடுதி, பிளாவிடுதி, வாண்டான்விடுதி, கருவடத்தெரு, வெள்ளாளவிடுதி, கருகீழத்தெரு, மஞ்சப்பேட்டை, புனல்குளம், நத்தமாடிப்பட்டி, அரவம்பட்டி, நடுப்பட்டி, குப்பக்குடி, அரையப்பட்டி, கைக்குறிச்சி, பாப்புடையான்பட்டி, ஒடுகம்பட்டி, குடுமியான்மலை, தண்டலை, ஒளியமங்கலம், அரசமலை, மேலைச்சிவபுரி, பெருநாளூா், பலவரசன், நம்பம்பட்டி ஆகிய 27 பதவிகளில் மாா்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் தெரிவித்தாா்.

    ஞாயிற்றுக்கிழமை பகலில் மாவட்டம் முழுமைக்குமான வாா்டு உடன்பாடு பட்டியல் வெளியிடப்படும் என வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் தெரிவித்தாா். இதில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவையும் இடம்பெறும் எனத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai