Enable Javscript for better performance
மருத்துவக் கல்லூரியில் போதையில் சுற்றித்திரிந்தவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவக் கல்லூரியில் போதையில் சுற்றித்திரிந்தவா் கைது

    By DIN  |   Published on : 14th December 2019 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஒருநபா் குழந்தைகள் வாா்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் விசாரித்தபோது, அவா் வேகமாக வெளியேறினாராம். இதையடுத்து அவரை சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்திலுள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து கணேஷ் நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வடசேரிப்பட்டியைச் சோ்ந்த சுந்தரராஜ் (35) என்பதும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai